Commons:சுய ஆக்கப் பங்களிப்பு முறைமைகள்

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
'சுய ஆக்கம்' என்ற பிரிவின் கீழ்ப் பங்களிப்பதற்கான முறைமைகள் இங்கு, விவரிக்கப்பட்டுள்ளன. இம்`முறைமைகள்`, தவறாமல் பின்பற்றப்பட வேண்டிய, வழிமுறைகளாகும்.

முறைமை 1 : 'சுய ஆக்கம்' என்றால் என்ன?[edit]

நடுவம்:'சுய ஆக்கம்' என்ற பக்கத்தில் குறிப்பிடபட்டுள்ளவகளை மட்டுமே, பதிவேற்றம் செய்ய வேண்டும். நீங்கள் உருவாக்கிய எல்லாவற்றினையும், 'சுய ஆக்கம்' என்ற பிரிவின் கீழ்ப் பதிவேற்றம் செய்யக் கூடாது. எனவே, அப்பக்கத்தினை தவறாமல் ஒருமுறை கண்டறியவும்.

முறைமை 2 : இப்பங்களிப்பு தேவையானதா?[edit]

நடுவம்:திட்டநோக்கம் என்ற பக்கத்தில் பங்களிப்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விக்கி ஊடக அடிப்படையமைவுத் திட்டங்களுக்குத் தேவையான ஊடகக் கோப்புக்களை மட்டும் இங்குப் பதிவேற்றவும்.
(எ.கா).விக்சனரி (அ) விக்கிப் பீடியாவில்எழுதப்பட்டிருக்கும் அல்லது எழுதப்படவிருக்கும் கட்டுரைகளுக்கு, அவசியமான ஊடகக் கோப்புகளை மட்டும் பதிவேற்றவும்.

முறைமை 3 : கோப்பு வடிவம்?[edit]

இங்குக் கட்டற்ற கோப்பு வடிவங்களை மட்டுமே, பதிவேற்ற முடியும் அவை வருமாறு;-
  • நிழற்படம் :jpeg
  • விவரப்படம் : svg / png
  • ஒளிதம் & ஒலிதம் : ogg
மேலும், இவை குறித்து நடுவம் : மென்பொருள் என்ற பக்கத்தில், பல்வேறு தகவல்கள் மிக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.ஒரு பதிவேற்ற படிவம் மூலம் 20MB அளவுள்ள கோப்புகளை மட்டுமே பதிவேற்ற முடியும்.

முறைமை 4 : பதிவேற்றம்[edit]

நடுவம் : முதல்தேவைகள் என்ற பக்கத்தில், இது குறித்து நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி , பயனர் கணக்கு வேண்டும்.எனவே, புகுபதிகை செய்யவும்.
  • பதிவேற்ற கோப்புக்குச் சிறந்த முறையில் பெயரிடுவது, மிகமிக அத்தியாவசியமானது. அப்படிப் பெயரிட்டால் மட்டுமே, பிறர் உங்கள் கோப்பினைச் சுலபமாகக் கண்டறிய முடியும்.
  • புகுபதிகை செய்தவுடன், நேரிடையாக பதிவேற்றப்படிவத்தின் மூலம் பதிவேற்றம் செய்யலாம்