User:Arunankapilan

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
Arunankapilan

அருணன் என்னும் இயற்பெயர் கொண்ட இவர், புதுவையில் கபிலன் பதிப்பகம் என்னும் பெயரில் நூல் வெளியீடு செய்து வருகிறார். புகைப்படக் கலையிலும், ஆவணப் படங்கள் தயாரிப்பதிலும் (இயக்குவதிலும்) விருப்பமுடைய இவர் புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் இளமுனைவர் பட்ட ஆய்வாளர் தகுதி பெற்றிருக்கிறார். இயற்பெயரோடு பதிப்பகப் பெயரையும் இணைத்து அருணன் கபிலன் என்னும் பெயரில் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுதி வருகிறார். காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடுள்ளதால் காந்தியடிகள் குறித்த தகவல்களை விக்கி தளத்துக்குக் கொண்டு தருவதில் முனைப்புக் காட்டி வருகிறார். காந்தியத்தோடு தமிழ் மற்றும் தமிழர் மரபு, வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் தொடர்பான தளங்களில் பதிவுகளை அளித்து வருகிறார். இவர்தம் பதிவுகள் நாளிதழ்கள், வார இதழ்கள், பன்னாட்டுக் கட்டுரை மலர்கள் ஆகியவற்றில் இடம் பெற்று வருகின்றன. இணையத்தில் இவை தொடர்புடைய பல பதிவுகளைச் செய்து வருகிறார். காணொளிக் காட்சிகளை யுட்யூப்பில் (Arunanful) நிறையத் தந்திருக்கிறார். விழாக்கள், உரைகள், அரிய தமிழறிஞர்களின் நேர்காணல்கள் முதலியன அவற்றுள் குறிப்பிடத் தகுந்தனவாகும். இந்திய சாகித்திய அகாதெமி குழுவினரால் இளம் கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்று இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தினரால் ஒரிய மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்றமை. சாகித்திய அகாதெமியின் சார்பில் இளம் கவிஞருக்கான இந்திய இலக்கியப் பயணம் மேற்கொண்டமை. அண்மையில் சாகித்திய அகாதெமியின் சார்பில் கல்கத்தாவில் நடத்தப் பெற்ற தாகூர் 150 விழாவில் அனைத்து இந்திய மொழி கவிஞர்களின் சந்திப்பில் தமிழகம் சார்பாகப் பங்கேற்று கவிதை வழங்கியமை ஆகியன குறிப்பிடத் தக்கன. பன்னாட்டு நகரமான ஆரோவில்லிலிருந்து வெளிவரும் செய்திமடலின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் வடிவமைப்பாளராகவும் இயங்கி வருகிறார். அங்குள்ள இளைஞர்கள் கல்வி மையத்திலும் தமிழ் மரபு மையத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பகுதிநேரமாகப் புகைப்படத் துறையில் ஈடுபட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் பதிவு செய்து வருகிறார். அரிய தொகுப்பு ஒன்றையும் பாதுகாத்து வருகிறார். அவற்றில் சிலவற்றை விக்கிபீடியாவுக்கும் வழங்கியிருக்கிறார். இவை தவிரவும் மென்பொருள் வடிவமைப்புத் துறையிலும் ஈடுபட்டுக் கலைப்பணியாற்றி வருகிறார். பதிப்பகம், ஆவணக்காப்பு, படைப்பு ஆகியவற்றில் முனைந்துள்ளார். மேலும் விவரங்கள் தேவைப்படின் இணையத்தில் இவரது பதிவுகளை அறிய அருணன் கபிலன் என கூகுளில் தேடினால் விரியும் பக்கங்களில் காண இயலும்.